கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை விரைவாக கைது செய்த காவலர்களை பாராட்டிய எஸ்பி

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை விரைவாக கைது செய்த காவலர்களை விருதுநகர் எஸ்பி பாராட்டி உள்ளார்.

Update: 2024-06-13 16:23 GMT
கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை விரைவாக கைது செய்த காவல்துறையை பாராட்டிய எஸ்பி

 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த எட்டாம் தேதி சக்தி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை ஈடுபட்ட சீனிவாசன் என்பவரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

அவரிடம் நடத்தி விசாரணையில் மேலும் கஞ்சா விற்பனை செய்து வந்த பாண்டியராஜ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்து ஒரு கிலோ 400 கிராம் எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றினர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சீனிவாசன் பாண்டியராஜ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டது சிறையில் அடைக்கப்பட்டனர்

மேலும் இந்த வழக்கில் சிறப்பாக செயலாற்றிய ராஜபாளையம் தனிப்படை சார்பாக ஆய்வாளர் முருகராஜ் மற்றும் தலைமை காவலர் பாலகிருஷ்ணன் காவலர்கள் துறைமுத்து,

மதன் ராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் தனிப்படை சிறப்பு ஆய்வாளர் கண்ணன் மற்றும் தலைமை காவலர்கள் கணேசன் மூர்த்தி வெங்கடேசப்பிரமணி விமல் பவுல்ராஜ் மற்றும் சதுரகிரி குமார் ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்

Tags:    

Similar News