பெண்ணை கடத்தும் முயற்சியை தடுத்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு !
சொத்து பிரச்சனை காரணமாக 6 பேர் கும்பல் பெண்ணை கடத்த முயன்ற போது போலீசார் இதை கண்டு அதிரடியாக செயல்பட்டு, சம்மந்தபட்ட நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-13 06:41 GMT
எஸ்பி பாராட்டு
கன்னியாகுமரி மாவட்டம், (10.06.2024) அன்று கன்னியாகுமரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சொத்து பிரச்சனை காரணமாக 6 பேர் கும்பல் பெண்ணை கடத்த முயன்றது. இதில் அந்த பெண்ணின் மகள், மருமகன் மற்றும் கூட்டாளிகள் ஈடுபட்டனர்.அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் இதை கண்டு அதிரடியாக செயல்பட்டு, சம்மந்தபட்ட நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கடத்தல் சம்பவத்தை தடுப்பதற்கும் குற்றவாளிகளை கைது செய்வதற்கும் உதவியாக இருந்த கன்னியாகுமரி நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நேற்று மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி வெகுவாக பாராட்டினார். .