அருள்மிகு எறும்பீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
திருச்சி திருவெறும்பூரில் உள்ள அருள்தரும் நறுங்குழல்நாயகி உடனுறை அருள்மிகு எறும்பீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் தீபாராதனை நடைபெற்றது.;
Update: 2023-12-27 08:35 GMT
அருள்மிகு எறும்பீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள மலைக்கோவில் என்று அழைக்கப்படும் அருள்தரும் நறுங்குழல் நாயகி உடனுறை அருள்மிகு எறும்பீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வண்ணமலர்கள், வாழைமரங்கள், கரும்பு ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் நடராஜர், சிவகாம சுந்தரி, மாணிக்கவாசகருக்கு மஞ்சள், திராவியபொடி, அரிசி மாவு, பழ வகைகள், தேன், பன்னீர், பழச்சாறு, தயிர், இளநீர், சந்தனம், திருநீறு, பால், உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க, சிவ வாத்திய இசையுடன் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் , சிவனடியார்கள் கலந்து கொண்டு தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சிவபெருமானை வழிபட்டனர்.