சிறப்பு உதவி ஆய்வாளர் மண்டை உடைப்பு - ஆசாமி கைது
சீர்காழி அருகே குடிபோதையில் தாயுடன் சண்டையிட்டு கொண்டிந்த மகனை கண்டித்த சிறப்பு உதவி ஆய்வாளரின் தலையை கட்டையால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2023-12-26 08:31 GMT
காயமடைந்த எஸ் எஸ் ஐ சீனிவாசன்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலவரவுக்குடி கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி .இவரது மகன் அன்பு தமிழ் சாகர். இவர் குடித்துவிட்டு தாயிடம் தகராறு ஈடுபட்டுள்ளார் .இது குறித்து தாய் தமிழ்ச்செல்வி காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையின் நூறு நம்பருக்கு கால் செய்து தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்போது பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று தாயுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த மகன் அன்பு தமிழ் சாகரை கண்டித்துள்ளார்.இதில் ஆத்திரமடைந்த அன்பு தமிழ் சாகர் அருகில் இருந்த கட்டையை எடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசனின் தலையில் பலமாக அடித்துள்ளார் இதில் மண்டை உடைந்து பலத்த காயமடைந்த சீனிவாசன் ரத்த காயங்களுடன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய அன்பு தமிழ் சாகரை கைது செய்தனர்.