சட்ட விரோத மது விற்பனை-சிறப்பு உதவி ஆய்வாளர் மகன் மற்றும் நண்பர் கைது.

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-12-14 07:42 GMT

சட்டவிரோத மது விற்பனையில் சிறப்பு உதவி ஆய்வாளர் மகன் மற்றும் நண்பர் கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய எல்லைகு உட்பட்ட குப்பேபாளையம்-காரமடை சாலையில் தனியார் ரெஸ்டாரெண்ட் செயல்பட்டு வருகிறது.அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ரெஸ்டாரெண்ட் பின்புறம் பகுதியில் இரண்டு வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்தனர்.போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்துள்ளனர்.தப்பி ஓட முயன்ற  வாலிபர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது அங்கு வாலிபர்கள் டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து ரெஸ்டாரெண்ட் பின்புறம் பதுக்கி வைத்து சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது தெரிய வந்தது.இதனையடுத்து விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்த 1லட்சத்து 41,150 ரூபாய் மதிப்பிலான 737 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சந்தோஷ் குமார் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி அய்வாளராக பணியாற்றி வரும் பாலசுப்பிரமணியம் என்பவரது மகன் என்பதும் மற்றொருவர் பொள்ளாச்சி ஆழியாரை சேர்ந்த புஷ்பாவேல் (30) என்பதும் தெரிய வந்தது. மேலும் விற்பனைக்காக வைத்திருந்தது போலி மதுபானங்கள் எனவும் கூறப்படும் நிலையில் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News