தஞ்சாவூரில் சிறப்பு வங்கி கல்விக் கடன் உதவி முகாம்

Update: 2023-10-29 15:44 GMT

கல்வி கடன் முகாம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வங்கிகள் சார்பில், வங்கிக் கடன் உதவி வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில்  நடைபெற்றது. திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், 10 நபர்களுக்கு ரூ 21 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில், வங்கிக் கடன் உதவிக்கான ஆணைகளை வழங்கி வழங்கி, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் பேசியதாவது: "தனியார் கல்லூரிகளில் உயர் கல்விக்கான கட்டணம் கூடுதலாக உள்ளதால், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்க உதவிக்கரமாக, கல்விக்கடன் விளங்குகிறது.

இக்கடன் உதவி பெற்று சுயமாக தொழில் செய்வோரும், கூட்டாக தொழில் செய்வோரும் பயன்பெறலாம். மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு கடனுதவி அதிகம் வழங்கியது கழக ஆட்சியே. இந்தியாவிலேயே, தமிழ்நாட்டிலேயே, தஞ்சாவூர் மாவட்டம் தான் கல்விக் கடன் உதவிகளை அதிகம் வழங்கி வரும் மாவட்டமாகும்.

இது போன்ற வங்கிக் கடன் உதவிகளை பெற்று, முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்ந்திட வாழ்த்துகிறேன்" என்றார்.  இம்முகாமில் 169 பேர், ரூபாய் 2.90 கோடி மதிப்பில் கடனுதவி கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, முதன்மை வங்கி  மேலாளர் நாகேஸ்வர ராவ், முன்னோடி வங்கிகளின் மேலாளர் பிரதீப் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News