திருவள்ளுவர் கழகம் சார்பில் சிறப்பு பட்டிமன்றம்
சுத்தமல்லி திருவள்ளுவர் கழகத்தின் சார்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.;
Update: 2024-01-03 06:41 GMT
பட்டிமன்றம்
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி திருவள்ளுவர் கழகத்தின் சார்பாக மைய நூலக வாசகர் வட்ட துணை தலைவர் கோ.கணபதி சுப்ரமணியன் தலைமையில் கருத்துக்களால் திருக்குறளில் விஞ்சி நிற்பது அறமா? பொருளா? என்ற தலைப்பில் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம் நேற்று நடைபெற்றது. இந்த பட்டிமன்றத்தினை கலை பதிப்பகத்தின் ஆசிரியர் கவிஞர் பாப்பா இரா. செல்வமணி தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த பட்டிமன்றத்தில் ஏராளமான கவிஞர்கள்,மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.