இருளர் பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்
சிங்காரப்பேட்டை அடுத்த ஆவாரங்குட்டை பகுதியில் சாதி சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள ஆவாரங்குட்டை கிராமப் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் தலைமையில் மலைவாழ் இருளர் இன மக்கள் வசித்து வசித்து வரும் பகுதியில் வருவாய் துறை மற்றும் பேரிடர் வேளாண்மை துறை சார்பில் நரிக்குறவன், இருளர், சமூக பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக வட்டாட்சியர் திருமலைராஜன் பங்கேற்று மக்களிடையே சிறப்புரை ஆற்றினார்.
அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் தங்களுக்கு கிடைக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் சரயு அவர்களின் உத்தரவின் பெயரில் ஆவாரங்குட்டை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள சாதி சான்றிதழ் பெறுவதற்காக சிறப்பு முகாம் நடைபெற்றதாகவும் இந்த முகாமில் சாதி சான்றிதழ், வீட்டுமனை பட்டா, ரேஷன் அட்டையில் திருத்தம், உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை பகுதி மக்கள் மனுக்களாக வழங்கினர்.
இந்த நிகழ்வில் புளியனூர், வெள்ளைகுட்டை, ஜே ஜே நகர், தளபதி நகர், பகுதிகளை சேர்ந்த பழங்குடி இருளர் இன மக்கள் தங்களது குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு சாதி சான்றிதழ் வேண்டி மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பெயரில் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு அப்பகுதி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நிகழ்வில் சிங்காரப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர்கள் பகுதி வெள்ளக்குட்டை ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி விஜயன் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.