3ம் தேதி போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்
திருச்சி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் காலை 7:00 மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடைபெற உள்ளது. அன்றைய தினம் பிறந்த குழந்தை முதல் ஐந்து வரிகள் உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இரண்டு சொட்டுக்கள் போலியோ சொட்டு மருந்து வாய் வழியாக வழங்கப்பட உள்ளது இதற்காக திருச்சி மாவட்டத்தின் கிராமப்புறங்களில் 1290 மையங்களிலும் மாநகராட்சியில் 290 மையங்களிலும் என 1580 மையங்களில் சுட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் மூன்றாம் தேதி பிறந்த குழந்தை முதல் ஐந்து வயது உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. கோவில்கள் மசூதிகள் தேவாலயங்கள் மற்றும் அனைத்து பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் விமான நிலையம் முக்கொம்பு போன்ற சுற்றுலா தளங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 52 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர் குழந்தைகளை அழைத்து வர இயலாத இடங்களில் அவர்களுக்கு 63 நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து திருச்சியில் இருந்து செல்வம் மற்றும் திருச்சி வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் மூன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை ரயிலில் பயணம் செய்யும் ஐந்து வயது உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.