திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
தென்காசியில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
தென்காசியில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா்அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற முகாமிற்கு தலைமை வகித்து ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் பேசியதாவது: திருநங்கையா் பொருளாதார ரீதியாக உயா்வு பெறுவதற்காக, அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா, குடியிருப்பு வீடுகள், இலவச தையல் இயந்திரம், உயா்கல்வி பயில உதவி, சுய உதவி குழுக்கள், சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணவசதி, இலவச திறன் பயிற்சி, வருமானத்தை ஈட்டும் தொழில் செய்திட ரூ.50ஆயிரம் வரை மானியம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டங்களில் பயன்பெறும் வகையில், சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில், திருநங்கைகளுக்கான அடையாள அட்டை வழங்குதல், ஆதாா் அட்டை திருத்தம், முதல்வரின் காப்பீட்டுத் திடடம், ஆயுஷ்மான் பாரத் காப்பீடு மற்றும் வாக்காளா் அடையாள அட்டை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றாா்.
மகளிா் திட்டம், மாவட்ட தொழில் மையம், கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் 120-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனா். இம்முகாமில் 2 திருநங்கைகளுக்கு முதல்வரின் காப்பீட்டு திட்ட அட்டைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். மகளிா் திட்ட இயக்குநா் மதி இந்திரா பிரியதா்ஷினி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கணேசன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் மாரியம்மாள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.