திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்-தென்காசி ஆட்சியர் அறிவிப்பு
தென்காசியில் திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம் 21. 06. 2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்தியாவிலே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசு "தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம்" 2008-ல் அமைத்து திருநங்கைகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் திருநங்கைகள் தொடர்பான சமகால தரவுகளை பெற்றிட மாநில அரசு ஒரு கணக்கெடுப்பை நடத்தி தற்போதுள்ள திருநங்கைகளின் எண்ணிக்கை விவரத்தின் அடிப்படையில் திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் பொது வேலைவாய்ப்பில் பொது இட ஒதுக்கிடு வழங்கிட ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அதனை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் தொடர்பு துறைகளுடன் இணைந்து திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்தல், அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை முகவரி திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயிஷ்மான் பாரத் அட்டை பெற்று வழங்குவதற்காக சிறப்பு முகாம் 21. 06. 2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள திருநங்கைகள் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற்றிட இம்முகாமினை பயன்படுத்தி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் தெரிவித்தார்.