அனைத்து முஸ்லீம் ஜமா அத் சார்பில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு
திருவிதாங்கோட்டில் அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் கல்விக் குழு சார்பில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆயத்த வகுப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
Update: 2024-02-29 03:44 GMT
கன்னியாகுமரி மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் கல்விக் குழு சார்பில் அரசுப் பொதுத் தேர்வை எழுதும் மாணவர்கள் அச்சமின்றி தேர்வை எழுதுவது எப்படி ? என்ற தலைப்பில் தேர்விற்கான ஆயத்த வகுப்பு திருவிதாங்கோட்டில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஜமாஅத் கூட்டமைப்பின் கல்விக் குழுத்தலைவர் எஸ்.அப்துல் லத்தீப் தலைமைத் தாங்கினார். கன்னியாகுமரி மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்ப்பின் தலைவர் எம் .ஏ.கான் துவக்கவுரை நிகழ்த்தினார். கல்விக் குழு செயலாளர் வழக்கறிஞர் உதுமான் மைதீன் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து அறிமுக உரையாற்றினார். கன்னியாகுமரி மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்ப்பின் பொதுச் செயலாளர் ஜி.எம்.எஸ்.ஷபீக் கல்விக் குழுவின் பொருளாளர் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னைப் புதுக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் அன்சார் திட்ட உரையாற்றினார்.நிகழ்வை கூட்டமைப்பின் கல்விக் குழு துணைக் கன்வீனர் மு.சம்சுதீன் ஒருங்கிணைத்தார்.