மன அழுத்தங்களிலிருந்து விடுபட சிறப்பு வகுப்பு

திண்டுக்கல்லில் உள்ள சிறையில் தமிழ்நாடு மனநல மறு சீரமைப்பு மன்றம் சார்பில் ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-01-20 07:56 GMT


திண்டுக்கல்லில் உள்ள சிறையில் தமிழ்நாடு மனநல மறு சீரமைப்பு மன்றம் சார்பில் ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


திண்டுக்கல்: தமிழகம் முழுவதும் சிறைக்கூடங்களில் உள்ள கைதிகள் மன அழுத்தங்களால் தற்கொலை செய்து கொள்வது,சக கைதிகளிடைய மோதிக்கொள்வது, வன்முறையில் ஈடுபடுவது உள்ளிட்ட பிரச்சனைகள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் மருத்துவ குழுவினர் அனைத்து சிறைகளுக்கும் சென்று அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். அதன்படி திண்டுக்கல்லில் உள்ள சிறையில் தமிழ்நாடு மனநல மறு சீரமைப்பு மன்றம் சார்பில் ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அமைப்பின் தலைவரான முன்னாள் நீதிபதி பாலச்சந்திர குமார், உறுப்பினர்கள் முத்துச்சாமி, செல்வராஜ், மருத்துவர்கள் முருகராஜ், காமராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் சிறை கைதிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
Tags:    

Similar News