ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு பல் மருத்துவ முகாம்
திருவள்ளூர் மாவட்டம் புதிய வெள்ளனுாரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு பல் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
Update: 2024-03-02 15:57 GMT
மதுரவாயல் மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் திருவள்ளூர் மாவட்டம் புதிய வெள்ளனுாரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு பல் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. 'பீரியண்டோடாலஜி' துறை சார்பில் நடந்த இம்முகாமில் துறையின் தலைவர் டாக்டர் ஜெய்தீப் மகேந்திரா மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பிரியா தலைமையில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பல்வேறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் டாக்டர்கள் கீதா, நிகிதா, பிரசாந்த் உட்பட முதுகலை பட்டாதாரிகள் மற்றும் பயிற்சியாளர்களும் பங்கேற்றனர்.