பண்டிகைகளை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு தள்ளுபடி
கிறிஸ்துமஸ், புத்தாண்டு,பொங்கல்பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை கடைகளில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது.;
கோ-ஆப்டெக்ஸ்
சேலம் மண்டல கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் காங்கேயவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கைத்தறி ரகங்களுக்கு அனைத்து கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் 30 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடியை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
மேலும் புதிய வடிவமைப்புகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நெசவாளர்கள் உற்பத்தி செய்யக் கூடிய பட்டு, பருத்தி சேலைகள், வேட்டிகள், லுங்கிகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், ஏற்றுமதி ரக வீட்டு உபயோக துணி ரகங்கள், மற்றும் கைப்பைகள் போன்ற ஏராளமான ரகங்கள் பிரத்யேகமாக தருவிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு முதல் முறையாக கோ-ஆப்டெக்ஸில் புதிய சிலிம் பிட் சட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. “புவி சார் குறியீடு” பெற்ற கைத்தறி ரகங்களான காஞ்சிபுரம் பட்டு புடவைகள், ஆரணிபட்டு புடவைகள், திருபுவனம் பட்டு புடவைகள், செட்டிநாடு காட்டன் புடவைகள், சுங்கடி காட்டன் புடவைகள், நெகமம் காட்டன் புடவைகள், சேலம் பட்டு வேட்டிகள், பவானி ஜமக்காளம் ஆகிய ரகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.