திருவாரூரில் வரும் 25,26 தேதிகளில் சிறப்பு வாக்காளர் பட்டியல் முகாம்

வாக்காளர் பட்டியல் முகாம்

Update: 2023-11-15 10:26 GMT

மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ,திருவாரூர், நன்னிலம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 27ஆம் தேதி அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது, மேலும் கடந்த நான்கு மற்றும் ஐந்தாம் தேதிகளில் சிறப்பு வாக்காளர் பட்டியல் முகாம்கள் நடைபெற்றது. இதனை ஒட்டி வரும் 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களுக்கு சிறப்பு வாக்காளர் பட்டியல் முகாம்கள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேதி மாற்றப்பட்டு வரும் 25 மற்றும் 26 ஆகிய தினங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் முகாம் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News