மாற்றுதிறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை அளித்தனர்;
Update: 2023-12-27 01:26 GMT
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது தொழில் கடன் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்ற சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் மாதாந்திர உதவித்தொகை வீட்டுமனைப் பட்டா, பெட்ரோல் ஸ்கூட்டர், பசுமை வீடு மற்றும் வங்கிக்கடனுதவி உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 200 மனுக்கள் பெறப்பெற்றன.