மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

பள்ளிபாளையம் தனியார் மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது

Update: 2024-01-29 11:42 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா

பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலை அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்  மாற்றுத்திறனாளிகளுக்கான  சிறப்பு மருத்துவ நடைபெற்றது.  முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, கண் உள்ளிட்ட பரிசோதனைகள் சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயர்சிகிச்சை தேவைப்படுவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உயர் சிகிச்சைகள், பிசியோதெரபி சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட உள்ளது. முகாமில் 59 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை,  54 மாற்றுத்திறனாளிகளுக்கு புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டை,   42 மாற்றுத்திறனாளிகளுக்கு UDID அடையாள அட்டை, 40 மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, 16 மாற்றுத்திறனாளிகளுக்கு உயர் பாதுகாப்பு பராமரிப்பு உதவித்தொகை, 16 மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறை சார்பில் 18-வயதிற்குட்பட்டவர்களுக்கான உதவித்தொகை, 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் அடையாள அட்டை, 5 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி,  7-மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள்,  1-மாற்றுத்திறனாளிக்கு தையல் இயந்திரம், 1-மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் என மொத்தம் ரூ.65,350/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா அவர்கள் வழங்கினார்.   7-மாற்றுத்திறனாளிகளுக்கு புதியதாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. இந்த முகாமின் மூலமாக ஏராளமானோர் பயனடைந்தனர்..
Tags:    

Similar News