நக்கம்பாடி ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே நக்கம்பாடி ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

Update: 2023-12-31 03:59 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே நக்கம்பாடி ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே நக்கம்பாடி ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான எம்.முருகன் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து பேசினார். இந்த முகாமில் பொது மருத்துவம்,குழந்தைகள் பிரிவு தோல் மருத்துவம் எலும்பு சிகிச்சை கண் சிகிச்சை யுனானி ஆயுர்வேதம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.மேலும் இசிஜி ரத்த நோய் கண்டறியும் ஆய்வகம்,தடுப்பூசி செலுத்துதல் போன்ற முகாம்களும் செயல்பட்டதால் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காத்திருந்து பல்வேறு சோதனைகளை எடுத்துக் கொண்டனர்.உடல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் மேல்சிகிச்சை வழங்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் ராஜா, வைத்தியநாதன் , அப்துல் மாலிக் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், மருத்துவர்கள் செவிலியர்கள், வருவாய்த் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News