மழை வேண்டி பால ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்கார பூஜை
சேலம் மாவட்டம், அரசிராமணி அருகில் அமைந்துள்ள வெள்ளூற்றுப்பெருமாள் கோவில் பால ஆஞ்சநேயருக்கு மழை வேண்டி சிறப்பு பிராத்தனை நடைப்பெற்றது.
Update: 2024-05-11 03:14 GMT
சேலம் மாவட்டம்,சங்ககிரி வட்டம் அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட சூரியன் மலை அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு வெள்ளூற்றுப்பெருமாள் கோவில் பால ஆஞ்சநேயருக்கு சித்திரை நான்காவது சனிக்கிழமையையொட்டி அதிகாலை முதலே ஆஞ்சநேயருக்கு பால்,தயிர், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் விவசாயம் செழிக்க சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு பால ஆஞ்சநேயர் சுவாமியை வழிபாடு செய்தனர்.