நெல்லையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்
நெல்லையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-03 08:53 GMT
போலியோ சொட்டு மருந்து முகாம்
தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று (மார்ச் 3) நடைபெற்றது.
மாநகராட்சி மேயர் சரவணன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.