சாய்பாபாவுக்கு இன்று சிறப்பு பொங்கல்
திண்டுக்கல் சாய்பாபாவுக்கு இன்று சிறப்பு பொங்கல் வைக்கப்படுகிறது.;
Update: 2024-01-18 08:05 GMT
சிறப்பு பொங்கல்
திண்டுக்கல் , நாகல் நகர் பாரதிபுரத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் தினமும் சிறப்பு அபிஷேகம், 3 வேளை அன்னதானம் நடைபெற்று வருகிறது. மேலும் வியாழக்கிழமை தோறும் சாய்பாபாவுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு வழிபாடு நடக்கிறது.
அதனை தொடர்ந்து நாளை மாலை 5 மணி அளவில் சாய்பாபா கோவிலில் சமத்துவ பொங்கல் விழா நடைபெறுகிறது.இதில் பக்தர்கள் 30 பேர் பொங்கல் பானையில் பொங்கல் வைக்கின்றனர்.
இந்த பொங்கலை சாய்பாபாவுக்கு படைத்து பூஜை செய்யப்படுகிறது. ஆகவே சாய் பாபா பக்தர்கள் அனைவரும் இந்த சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சாய்பாபாவின் அருளை பெற்று செல்ல வேண்டும்.