அழகுராய பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
மல்லசமுத்திரம் அழகுராய பெருமாள் கோவிலில் மார்கழி மாத சனிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது.
Update: 2024-01-07 02:22 GMT
மல்லசமுத்திரம் சந்தைபேட்டை அருகில் உள்ள, அழகுராயபெருமாள் கோவிலில் நேற்று, தனுர்மாதம் என்று அழைக்ககூடிய மார்கழி 21ம்நாள் மற்றும் மார்கழி சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் அழக சவுந்தரராஜ பெருமாள் மற்றும் வெளிப்பிரகாரத்தில் இருக்கும் வீரபக்த ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு தோற்றத்தில் அருள்பாலித்தனர். காலை முதல் அபிசேக ஆராதனை நடந்தது. பெண்கள் தீபமிட்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.