காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
விழுப்புரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Update: 2024-05-30 16:43 GMT
விழுப்புரம் காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபி ஷேகம் நடை பெற்று ஓராண்டு நிறைவு பெற் றதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. இதையொட்டி காலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், பிற்பகல் 12 மணியளவில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப் பட்டு, அம்மனுக்கு மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரவு 8மணியளவில் சாமி வீதியுலா புறப்பாடு நடந்தது.