அமாவாசையை முன்னிட்டு பரமத்தி அங்காளபரமேஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜை
அமாவாசையை முன்னிட்டு பரமத்தி அங்காளபரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-05-07 17:45 GMT
சிறப்பு பூஜை
சித்திரை மாதம் அமாவாசையை முன்னிட்டு பரமத்தி அங்காளபரமேஸ்வரி கோயிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால்,தயிர்,நெய்,மஞ்சள்,திருமஞ்சள்,பன்னீர், பஞ்சாமிருதம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோயில் குடிப்பாட்டு மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.