செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் சிறப்பு பூஜை

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Update: 2024-01-24 11:43 GMT

செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் சிறப்பு பூஜை

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை அடுத்து செஞ்சி கோட்டையில் உள்ள வெங்கட்ரமணர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரம ணருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பஜனை கோஷ்டிகளுடன் ராமர் படம் கோவிலை சுற்றி ஊர் வலமாக எடுத்துவரப்பட்டது. பின்னர் 108 ராமபஜனையும், ஆண் டாள் கோஷ்டிகளின் கோலாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்ன தாக ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவன தாளாளர் வக்கீல் ரங்க பூபதி குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் வக்கீல்கள் வைகை தமிழ்ச்செல்வன், சக்தி ராஜன், ராஜேந்திரன், பா.ஜனதா பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி மற்றும் சுதர்சன பாக வதர் சீனு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News