விக்கிரவாண்டி புவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
விழுப்புரம் மாவட்டம் ,விக்கிரவாண்டி புவனேஸ்வரர் கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Update: 2024-05-02 16:15 GMT
விழுப்புரம் மாவட்டம் ,விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை ஸ்ரீபுவனேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத திருவோணம், குருபெயர்ச்சி விழா, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், சிவகாமி உடனுறை நடராஜருக்கும், மாணிக்கவாசகர், காலபைரவர், குரு உள்ளிட்ட நவ கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து மலர்களால் அலங்கரித்து மகா தீபாரா னை நடைபெற்றது. பின்னர் சிவகாமி உடனுறை நடராஜர் சாமி கோவில் வளாகத்தினுள் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாககலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். பூஜை மற்றும் அபிஷேகங்களை ரவி குருக்கள், வேதாத்திரி குருக்கள் முன்னின்று செய்தனர்.