விஸ்வேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை
அக்ரகாரம் விஸ்வேஸ்வர ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-04-14 11:38 GMT
தமிழ்புத்தாண்டு சிறப்பு வழிபாடு
தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலை அக்ரஹாரம் காவிரி கரையோரம் அமைந்துள்ள அருள்மிகு விஸ்வேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நிகழ்வுகள் நடைபெற்றது. விஸ்வேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்ததை சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நிகழ்வில் பங்கேற்று தரிசனம் செய்தனர். நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.