பிரதோஷத்தையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

மார்கழி மாத பிரதோஷத்தையொட்டி சேலம் சுற்றுவட்டார கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.;

Update: 2023-12-25 01:31 GMT

பிரதோஷ வழிபாடு 

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாகசாமிக்கு. தேன். பால். இளநீர், பஞ்சாமிர்தம், தயிர், ஜவ்வாது, உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோன்று வீரகனூரில் கங்கா சவுந்தரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.சாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் நெய் தீபம் நல்லெண்ண தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். வில்வமாலை, அருகம்புல் மாலை அணிவித்து சாமியை வழிபட்டனர். தலைவாசல் கைலாசநாதர் கோவில், பெரிய ஏரி தான்தோன்றீஸ்வரர் கோவில், நாவகுறிச்சி வைத்தீஸ்வரன் கோவில், சிறுவாச்சூர் ஏகாம்பரேஸ்வரர் கோவில், தேவியாகுறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவில் ஆகிய தலைவாசல் பகுதியில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.


Tags:    

Similar News