பழனி ஆண்டவருக்கு சிறப்பு பூஜை!

பழனி ஆண்டவர் ஆலயத்தில் கிருத்திகை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2024-07-03 09:09 GMT

பழனி ஆண்டவர் 

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் ஆலயத்தில் கிருத்திகை தினத்தை முன்னிட்டு பழனி ஆண்டவருக்கு நேற்று  சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News