அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை
கல்வடங்கம் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Update: 2024-05-10 15:59 GMT
சேலம் மாவட்டம்,சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் சித்திரை மாத வெள்ளிக்கிழமையை ஓட்டி அங்காளம்மனுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர்,இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருளை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து அருள்மிகு அங்காளம்மனை வழிபட்டு சென்றனர்.