பழையபாளையம் அங்காளம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை

நாமக்கல் மாவட்டம், சர்கார் பழைய பாளையம் பகுதியில் குடங்களில் நீர் நிரப்பி அந்த குடத்தில் வேப்பிலை கட்டி பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் கோவிலைச் சுற்றி மழை வேண்டி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Update: 2024-05-10 13:13 GMT

மழை வேண்டி சிறப்பு பூஜை 

தற்போதைய கோடை காலத்தில், நாமக்கல் மாவட்டத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் நிலவுவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். ஏரி, குளம், குட்டைகள், நீரோடைகள் வற்றியதால் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில்,நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், சர்க்கார் பழைய பாளையம் ஏரிக்கரை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள மூலவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மழை வேண்டியும் உலக நன்மைக்காகவும் வெயில் தாக்கம் குறையவும் சிறப்பு பூஜைகள் மற்றும் பிரார்த்தனை நடைபெற்றன.

முதலில் பல்வேறு திரவியங்கள் பால் தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர் மாலைகள் மற்றும் வஸ்திரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. பிறகு குடங்களில் நீர் நிரப்பி அந்த குடத்தில் வேப்பிலை கட்டி பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் கோவிலைச் சுற்றி மழை வேண்டி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News