நாமக்கலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை

நாமக்கல் நகரில் உள்ள கோட்டை பள்ளி வாசல், மாருதி நகர் பள்ளி வாசல் உள்ளிட்ட பல்வேறு மசூதிகளில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை நடந்தது.

Update: 2024-04-11 08:25 GMT

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல்லில் இன்று நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதம் நிறைவில் முஸ்லீம்கள் ரம்ஜான் பண்டிகையை புத்தாடை அணிந்து சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு, நாமக்கல் அஞ்சுமனே இஸ்லாமிய ஜாமியா மஸ்ஜித் சார்பில், ரம்ஜானை முன்னிட்டு நாமக்கல் பேட்டை பள்ளிவாசலில் இருந்து, முத்தவல்லி தவுலத்கான் தலைமையில் திரளான முஸ்லீம்கள் ஊர்வலமாக புறப்பட்டு, சேலம் ரோட்டில் MGM தியேட்டர் எதிரில் உள்ள ஈத்கா மைதானத்தை சென்றடைந்தனர்.

அங்கு ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஜாமியா பள்ளி வாசல் இமாம் சாதிக்பாஷா சிறப்பு தொழுகையை நடத்தினார். இதில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர் தொழுகையில் கலந்துகொண்டனர். தொழுகை முடிந்தபின்பு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பின்னர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பிரியாணி வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

பள்ளிவாசல் துணைத்தலைவர் பாரூக் பாஷா, செயலாளர் நியாமத், துணை செயலாளர் சையத் நாசர், பொருளாளர் மகபூப் பாஷா, செயற்குழு உறுப்பினர்கள் முகமது அலி, மஹபூப் பாஷா, ஆலிம்ஷா, ஷேக் நிஜாம், அப்துல் ரஹ்மான், சிக்கந்தர் ஆகியோர் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.நாமக்கல் நகரில் உள்ள கோட்டை பள்ளி வாசல், மாருதி நகர் பள்ளி வாசல் உள்ளிட்ட பல்வேறு மசூதிகளில், சிறப்புத் தொழுகை நடந்தது.

Tags:    

Similar News