தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் !
திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்கால முக்கிய நாளான நேற்றிரவு பெரிய வியாழனை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-29 09:32 GMT
தேவாலயம்
புனித வெள்ளி முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்கால முக்கிய நாளான நேற்றிரவு பெரிய வியாழனை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. திருப்பலி நடுவே பாதம் கழுவும் திருச்சடங்கு நடைபெற்றது. இன்று புனித வெள்ளி முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெருமக்கள் ஒன்று கூடி சிறப்பு பிரார்த்தனை ஆராதனைகளிலும் ஈடுபடுகின்றனர். எட்டுப்பட்டி பங்குத்தந்தை செல்வராஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.