ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Update: 2024-06-01 13:22 GMT
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் பஜார் வீதியில் அமைந்துள்ள பெரிய ஆஞ்சநேயருக்கு இன்று பால், தயிர், சந்தனம், இளநீர், தேன் முதலிய வாசனைப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஆஞ்சநேயருக்கு பூமாலை, வெற்றிலை மாலை சாற்றி அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் கேசரி பிரசாதமாக வழங்கப்பட்டது.