சங்கடஹரசதுர்த்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை

சங்ககிரி அருகே சங்கடஹரசதுர்த்தி விநாயகருக்கு சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2024-05-27 04:17 GMT

சிறப்பு பூஜை 

சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சங்கடஹர சதுர்த்தியையொட்டி ஸ்ரீ விநாயகர் சுவாமிக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனர்.பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News