கரூரில் மாநில அளவிலான சிறப்பு சதுரங்க போட்டி

கரூரில் என ஆனந்தம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் நடத்தும் மாநில அளவிலான பார்வையற்றோருக்கான சிறப்பு சதுரங்க போட்டி நடைபெற்றது.;

Update: 2023-12-30 15:45 GMT

சதுரங்க போட்டியில் கலந்து கொண்டவர்கள்

 கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மார்னிங் ஸ்டார் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் ஆனந்தம் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான பார்வையற்றோருக்கான சிறப்பு சதுரங்க போட்டி நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சுப்பிரமணி, கரூர் ஹோஸ்ட் லயன் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் சேது குமார், லயன் சங்க தலைவர் செல்வராஜ்,லயன்சங்க செயலாளர் சரவணன், பொருளாளர் சுரேஷ்குமார், ஆனந்தம் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் பாபு, துணைத் தலைவர் சுப்பிரமணி,

மாவட்ட செயலாளர் செல்லப்பா, பொருளாளர் ஆறுமுகம், கரூர் நகர செயலாளர் பூபதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு சதுரங்கப் போட்டி விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இந்த போட்டியில், கரூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சென்னை, திண்டுக்கல், சேலம், கோவை, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 42 பேர் இந்த போட்டியில் பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News