சேலம் வழியாக சிறப்பு ரயில்
சேலம் வழியாக டாட்டா நகர் எர்ணாகுளம் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக, ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Update: 2024-02-16 03:47 GMT
சேலம் வழியே டாட்டா நகர் எர்ணாகுளம் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எர்ணாகுளம் சிறப்பு ரயில் வரும் 19, 26 அதிகாலை 5:15க்கு புறப்பட்டு விஜயவாடா, பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே செவ்வாய் நள்ளிரவு,1:55க்கு எர்ணாகுளத்தை அடையும். சேலம் ஜங்ஷனுக்கு செவ்வாய் மாலை, 6:22க்கும், ஈரோட்டுக்கு, 7:30க்கும் வந்து செல்லும். மறு மார்க்கத்தில் பிப்., 22, 29 காலை, 7:15க்கு கிளம்பி, சனி அதிகாலை, 4:35க்கு டாட்டா நகரை அடையும். ஈரோட்டுக்கு வியாழன் மதியம், 1:35க்கும், சேலத்துக்கு, 2:47க்கும் வந்து செல்லும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.