எஸ்பி தலைமையில் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு.
தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்களுக்கு எஸ்பி தலைமையில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.
நாடு முழுவதும் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வழக்கத்தில் உள்ள சட்டத்தின் பெயரும் மற்றும் வழக்கு பிரிவுகளின் மாற்றப்பட்டுள்ளது. ஆகையால் காவல் துணை கண்காணிப்பாளர் முதல் காவலர்கள் வரை அந்த சட்டப் பிரிவுகள் மற்றும் புதிதாக இணைக்கப் பட்டுள்ள சட்டங்களைப் பற்றியும் ஐந்து நாட்கள் அவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்,தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம் அவர்கள் துவக்கி வைத்தார்.
இதில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், பாலசுப்பிர மணியன் உடனிருந்தனர். சட்டத்தின் பெயர் மாற்றம் IPC என்பதை BNS ,CRPC- BNSS. IEA- BSA சட்டத்தின் பெயர்கள் மாற்றி உள்ளது இந்த பயிற்சியானது தர்மபுரி உட்கோட்ட காவலர்களுக்கு தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்திலும் பென்னாகரம் மற்றும் பாலக்கோடு உட்கோட்ட காவலர்களுக்கு ஜெயம் கல்லூரியிலும் அரூர் உட்கோட்ட காவலர்களுக்கு அரூரில் ஜெயம் வித்யாலயா பள்ளியில் , இந்த ஐந்து நாட்கள் நடைபெறுகிறது சுழற்சி முறையில் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் இந்த சட்ட பயிற்சியானது நடைபெற உள்ளது.