போலீசாருக்கு யோகா மற்றும் தியான சிறப்பு பயிற்சி

பரமத்தி வேலூர் உட்கோட்ட காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாருக்கு யோகா மற்றும் தியான சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

Update: 2024-05-04 13:58 GMT

பரமத்தி வேலூர் உட்கோட்ட காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாருக்கு யோகா மற்றும் தியான சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.


நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர்‌ துணை போலீஸ் சூப்பிரண்டு உட்கோட்டத்திற்கு உட்பட்ட வேலூர், ஜேடர்பாளையம் நல்லூர், பரமத்தி, வேலகவுண்டம்பட்டி, மற்றும் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலையம் உட்பட 7 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும்  போலீஸ்காரர்கள், தலைமை போலீசார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 100- க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 24 மணி நேர பணியில் ஈடுபட்டு வருவதாலும், அதிக பணிச்சுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக மனதளவிலும், உடலளவிலும் ஏற்படும் சோர்வை போக்கும் வகையில் இன்று காலை  பரமத்திவேலூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் சிறப்பு யோகா மற்றும் தியான பயிற்சி நடைபெற்றது.  இப்பயிற்சியினை ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரும், யோகா பயிற்றுனருமான நாமக்கல்லை சேர்ந்த ஆறுமுகம் சிறப்பு பயிற்சி அளித்தார். பயிற்சியில் 7 காவல் நிலையங்களில் இருந்து சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பயிற்சியின் மூலம் மன அழுத்தம், பணிச்சுமை, உடல் சோர்வு குறைந்து,தூக்கமின்மை, போன்றவற்றில் இருந்து  புத்துணர்வு பெற முடியும் என யோகா பயிற்சியாளர் தெரிவித்தார்.
Tags:    

Similar News