சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம்

திருச்சி மாவட்டம்,முள்ளுரில் நடைப்பெற்ற கால்நடை மருத்துவ முகாமில் 700க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Update: 2024-02-11 12:21 GMT

சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம்

விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முள்ளுர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் ஆதிஸ்வரன் தலைமை வகித்தார்.முகாமில் கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகளில் நவீன உத்திகளை கையாளுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நீண்ட நாள் சினைபிடிக்காத மாடுகளுக்கு சிறப்பு மலடு நீக்க சிகிச்சை, மாடு மற்றும் ஆடுகளுக்கு ஆண்மை நீக்கம், வெள்ளாடு செம்மறி ஆடுகள் மற்றும் கன்றுகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தகுடற்புழு நீக்கம், கால்நடைகளுக்கு மாத்திரைகள், வழங்கப்பட்டது. வளர்ச்சியற்ற சத்து தாது உப்பு முகாமில் சிறந்த கிடேரிக் கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முகாமில் 720 க்கும் மேற்பட்ட கால்நடை பயன்பெற்றன. தெட்சிணாமூர்த்தி மருத்துவர் கால்நடைகள் வடவாளம் மருத்துவர் தலைமையில் தினேஷ்குமார்,ரவிச்சந்திரன், கால்நடை ஆய்வாளர் முருகேஷ் உள்ளிட்டோரும் சிகிச்சை அளித்தனர்.

Tags:    

Similar News