கருப்பாயூரணியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

கருப்பாயூரணியில் கலைஞர் கனவு இல்லம் குறித்து விளக்குவதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது

Update: 2024-06-28 14:02 GMT

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கருப்பாயூரணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி மணிமாறன் தலைமையில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீரய்யா முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 15 வது நிதிக்குழு மானியம் பற்றி பேசப்பட்டது.அதனைத் தொடர்ந்து கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான வழிமுறைகள் பற்றி பேசப்பட்டது.இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் பால்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News