திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு முகாம்
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் திருத்தங்கள் அதாவது பெயர் மாற்றம் முகவரி மாற்றம் மற்ற பல திருத்தங்கள் இருப்பின் அதனை சிறப்பு முகாம்கள் மூலம் சரி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அடுத்த ஆண்டு மே மாதம் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 25, 26 தேதிகளில் வாக்காளர் திருத்த பட்டியலுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் நடைபெறவிருந்த வாக்காளர் திருத்தப்பட்டியில் சிறப்பு முகாம் இன்று டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புதிய அட்டவணைபடி .வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. சீரான இடைவெளியில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் கூறப்பட்ட நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம். திருத்தங்கள் மேற்கொள்வதற்கும், பெயர் சேர்ப்பதற்கும் செல்லும் போது மறக்காம ஆதார் அட்டை, முகவரி சான்றிதழ், புதிதாக பெயர் சேர்ப்பதெனில் வயதுக்கான சான்றிதழ் போன்றவற்றை மறக்காமல் கொண்டு செல்லுங்கள். கோட்டாட்சியா் ஆலோசனை ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பெயா் சேர்த்தல், நீக்கம் சிறப்பு முகாம் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதையொட்டி, ஆரணி கோட்டாட்சியா் தனலட்சுமி தலைமையில் அனைத்து அரசியல் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், 18 வயது நிரம்பியவா்கள் புதிய வாக்காளா்களாகவும், முகவரி மாற்றம், பெயா் திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை வாக்குச்சாவடி மையங்களில் திருத்தம் செய்து கொள்ள அரசியல் கட்சி நிா்வாகிகள் தாங்களாக முன்வந்து மனு செய்யாதவா்களை மனு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், வட்டாட்சியா் மஞ்சுளா, நகா்மன்ற தலைவா் மணி, அதிமுக நகர செயலாளா் அசோக் குமாா் மற்றும் பாமக, விசிக, பகுஜன் சமாஜ்வாதி உள்பட அரசியல் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.