மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதை யொட்டி அதிகாலை கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெரு மானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவபெருமானுக்கும், அம்மனுக்கும் வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்,
அதன்பிறகு உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் பூசாரி, அறங்காவலர்களும், பூசாரிகளுமான தேவ ராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், வடிவேல், சந்தானம் மற் றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.