விஜயகாந்த் பூரண நலம் பெற தேமுதிக.,வினர் சிறப்பு வழிபாடு

காவேரிப்பட்டினத்தில் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தேமுதிகவினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

Update: 2023-12-01 11:13 GMT

காவேரிப்பட்டினத்தில் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தேமுதிகவினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டியும், விரைவில் நலம் பெற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப வேண்டுமென கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயத்தில் சங்கடஹரசதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தேமுதிக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் ஓம் சாந்தி, சங்கர், அவைத்தலைவர் சின்னராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன் மேற்கு ஒன்றிய செயலாளர் வஜ்ரவேல், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் விஜய், வல்லரசு, அதிரடி பிரபு, கேப்டன் மன்ற துணைச் செயலாளர் சின்னையன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கோவிந்தராஜ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News