சேலம் கோவில்களில் துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு

சேலம் சுகவனேஸ்வரர் கோவில் மற்றும் கோட்டை மாரியம்மன் கோவில்களில் துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு செய்தார்.

Update: 2024-03-31 02:15 GMT

 துர்கா ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து வாக்கு சேகரிக்க சேலம் வந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் வந்தார். அவர் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் மற்றும் கோட்டை மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்தார். கோவிலுக்கு வந்த துர்கா ஸ்டாலினுக்கு கோயில் குருக்கள் சிறப்பு மரியாதை வழங்கினர்.
Tags:    

Similar News