மங்கள வராஹி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை

மயிலாடுதுறை காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள ஸ்ரீமங்கள வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு  அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

Update: 2024-05-28 02:04 GMT

மங்கள வராஹி அம்மன் 

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தின் தென்கரையில்  ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமி ஆலயத்தில் உள்ள ஸ்ரீ மங்கள வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ மங்கள வாராஹி அம்மனுக்கு பால் பழம் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து விரலி மஞ்சள் மற்றும் பலவகை வண்ணமலர் மாலைகளால் அலங்காரம் செய்து பஞ்சமுக தீபாரதனை, மகாதீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் கூட்டாக  வாராஹி அம்மனின் ஸ்லோகங்களை கூறி வழிபாடு நடத்தினர். வேண்டுதலை நிறைவேற்ற வாழை இலையில் அரிசியை பரப்பி  தேங்காய் மூடியில் நெய்விளக்கு தீபமேற்றினர்.
Tags:    

Similar News