உலக நன்மை வேண்டி சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் சிறப்பு யாகம்
உலக நன்மை வேண்டி சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நடந்த சிறப்பு யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.;
Update: 2024-05-25 02:05 GMT
உலக நன்மை வேண்டி சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நடந்த சிறப்பு யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சிங்கவரம் மலை மீது பிரசித்தி பெற்ற ஸ்ரீ ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு உலக நன்மை வேண்டி மகா சாந்தி யாகம் மற்றும் மகா அபிஷேகம் நடை பெற்றது. இதையொட்டி, காலையில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, சிறப்பு அலங்கா ரத்தில் அருள்பாலித்தனர். பின்னர் யாகமண்டபத்தில் சிறப்பு மகாசந்தி யாகமும், அதை தொடர்ந்து மகா அபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உபயதாரர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.