ரயில்களின் வேகம் அதிகரிப்பு - பயணிகளுக்கு எச்சரிக்கை
Update: 2023-11-24 06:35 GMT
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் 3,4வது பிளாட்பாரத்தில் நேற்றிலிருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் தண்டவாளங்கள் அருகே செல்ல வேண்டாம் என ரயில்வே அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் 5 பிளாட்பாரங்கள் உள்ளது. இதில் 3,4வது பிளாட்பாரங்களில் வட,தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அதிகளவில் செல்கிறது. இதனால் செப்டம்பரில் 3,4 வது பிளாட்பார தண்டவாளங்களில் செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க சீரமைப்பு பணிகள் நடந்தது. தொடர்ந்து 1 மாதம் பணிகள் நடந்த நிலையில் 3,4 வது பிளாட்பாரத்தில் செல்ல வேண்டிய ரயில்கள் 2,5 பிளாட்பாரங்களுக்கு மாற்றப்பட்டது.