புதுகையில் ஜனவரி 23 இல் விளையாட்டுப் போட்டிகள்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.;

Update: 2024-01-21 12:48 GMT

புதுக்கோட்டையில் விளையாட்டு போட்டிகள்

முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட அரங்கில் வரும் ஜனவரி 23ஆம் தேதி கபடி, கால்பந்து மற்றும் கையுந்து பந்து போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மாவட்ட ஆட்சியர் மெர்சிரம்யா கூறியது வரும் ஜனவரி 23 காலை 8 மணி முதல் ஆண், பெண் இருபாலருக்குமான கபடி, கால்பந்து மற்றும் கையுந்து பந்து போட்டிகள் நடைபெற உள்ளன.

17 முதல் 25 வயது வரை உள்ளே ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். கபடி போட்டிக்கு முதல் பரிசாக ரூபாய் 20000, இரண்டாம் பரிசாக ரூபாய் 10000 மூன்றாம் பரிசாக ரூபாய் 5000 வழங்கப்படும். கால்பந்து போட்டிக்கு முதல் பரிசாக ரூபாய் 25,000, இரண்டாம் பரிசாக ரூபாய் 20000, மூன்றாம் பரிசாக ரூபாய் 10000 வழங்கப்படும். கையுந்து பந்து போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 15,000 ,இரண்டாம் பரிசாக ரூபாய் 10000 ,மூன்றாம் பரிசாக ரூபாய் 5000 வழங்கப்படும். கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது அணிகளின் பெயர்களை வரும் ஜனவரி 22 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட அரங்கத்தில் பதிய வேண்டும்.

Tags:    

Similar News